துலாம் ராசி அன்பர்களே..!
உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். திறமையான பேச்சின் மூலம் மட்டுமே எந்தவொரு வேலையிலும் வெற்றிப்பெற முடியும். இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியத்தில் சிறிய தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

தடைகளைத் தாண்டிதான் வெற்றிப்பெற வேண்டியதிருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். வீண் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்தினால் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். உடல் சோர்வாகக் காணப்படும். சரியான உணவும், சரியான தூக்கமும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.