மேஷம் ராசி அன்பர்களே..!
சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.

தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும் உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. தேவையில்லாத வீண் வயதிற்கு இடங்கொடுக்க வேண்டாம்.

சிலருக்கு பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பேச்சில் கட்டுப்பாடு தேவை. எச்சரிக்கையாகவே செயல்படுங்கள். வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புதிய நபரிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். அணுகுமுறையில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.