ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது.

துப்பாக்கிசுடுதலில் சிப்த் சம்ரா கவுர் ஆசிய விளையாட்டு போட்டியில் தன்னுடைய மூன்றாவது பதக்கத்தை வென்றிருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று காலை முதல் மூன்று விதமான பிரிவுகளில் 50 மீட்டர் துப்பாக்கிசுடுதல் போட்டி நடைபெறுகின்றது. 50 மீட்டர் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இன்று காலை இந்திய அணியாக வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்கள்.

முதல் ஆறு இடங்களுக்குள் சிப்த் சம்ரா கவுர் மற்றும் ஆஷிக் சவுக்சே என 2 இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தார்கள். இவர்கள் தனி வீரர்களின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார்கள்.  தற்போது இறுதி போட்டியில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்களை பெற்று கொடுத்துள்ளார்கள். ஒரு தங்கம்,  ஒரு வெள்ளிக்கிழமை என இரண்டு பதக்கங்களை 50 மீட்டர் பிரிவில் வென்றுஇருக்கின்றார்கள்.

சிப்த் சம்ரா கவுர் 50 மீட்டர் துப்பாக்கி சூடுதல் போட்டியில் 469.6 புள்ளிகள் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அதிக புள்ளி என்ற  உலக சாதனையோடு அவர் தங்கம் வென்றார்.  அதேபோல ஆஷிக் சவுக்சே 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலம் பதக்கம் வென்று இருக்கிறார். கடைசி இரண்டு சுற்று முழுவதும் வரை முதல் இரண்டு இடங்களிலும் இந்திய வீராங்கனைகள் இருந்தார்கள்.

கடைசி இரண்டு சுற்றுகளில்  ஆஷிக் சவுக்சே ஒரு புள்ளி இழந்ததன் காரணமாக அவர் வெண்கல பலத்தக்கத்தை வென்றார். இன்று காலை அணியாக வெள்ளி பதக்கத்தை வென்றிருந்தார்கள். தற்பொது  தங்கம் மற்றும் வெண்கலம் கிடைத்து இருக்கிறது. அதேபோல சிப்த் சம்ரா கவுர் அடுத்த வருடம் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிறார்