செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,  DMK ஆட்சியில் எந்த ஊருல பஸ் ஸ்டாண்ட்டை  திறந்தாலும் ஓடிப்போய் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெயரை வைப்பதில குறியாக இருக்க கூடிய அரசு,  அந்த ஊருல சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவருடைய பெயரை வைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன ? நினைவு மண்டபம் கட்டினோம் என டி.ஆர்.பாலு அவர்கள் சொல்லிருக்காங்க. நினைவு மண்டபம் கட்டுவது பெருசா ? மக்கள் வரி பணத்தில் நினைவு மண்டபம் கட்டி இருக்கீங்க, இது பெரிய விஷயம் கிடையாது. மக்கள் வரிப்பணத்தில் 70 ஆண்டு காலமாக நினைவு மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது.

நினைவு மண்டபதால் ஒரு தலைவர் வாழப்போவது கிடையாது. தலைவருடைய வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவதற்கு தமிழ்நாட்டு உடைய பாடப்புத்தகத்தில் இருக்கணும், கண்காட்சிகள் இருக்கணும், தலைவர் சம்பந்தப்பட்ட பொருட்காட்சிகள் வைக்கணும்.  அதெல்லாம் எதுவுமே பண்ணாம,  ஒரு நினைவு மண்டபத்தை மட்டும் ஒரு 5, 6 கட்டிருகோம் என சொல்லுறீங்க..

ஆமாம்..!  6 முறை நீங்க ஆட்சியில் இருந்திருக்கீங்க. 6  முறை யாரு ஆட்சியில் இருந்தாலும் கூட நினைவு மண்டபத்தை கட்டதா போறாங்க,  இது ஒரு சாதனை அல்ல. அதனால் நம்ம அண்ணன் டி. ஆர். பாலு அவர்கள்… திமுக உடைய மூத்த தலைவராக… பாராளுமன்ற உறுப்பினராக இருந்து…. ஒருமையிலே தமிழகத்துடைய ஆளுநரை பேசுவது நிறுத்தி கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.