
பொதுவாக மக்கள் அனைவருமே ரயில் போக்குவரத்தை தேர்வு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். ரயில் போக்குவரத்து என்பது மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பயணமுறையாக பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி வலைதளம் அல்லது செயலிகள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோன்று இன்றைய காலத்திலும் சிலர் ரயில் நிலைய கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட்டுகளை முன் பதிவுகள் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். இன்றைய வேகமான காலகட்டத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்வது பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு டிக்கெட்க்கும் ஐ.ஆர்.சி.டி.சி வசதி கட்டணம் வசூலிக்கிறது.
இதற்கான காரணம், ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கான முன்பதிவு உள்கட்டமைப்பு இயக்குதல், வாடிக்கையாளர் ஆதரவு சேவைகளை பராமரித்தல் மற்றும் பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய வேலைகளை நிர்வகிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டண முறை டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் அல்லது யுபிஐ போன்று பயணிகள் தேர்ந்தெடுக்கும் கட்டண முறையைப் பொறுத்து கட்டணங்கள் விதிக்கப்படலாம். இதற்கு உதாரணமாக, ஏசி வகுப்புகளில் முன்பதிவு செய்வதற்கு ரூபாய் 30 வசூலிக்கப்படும். சாதாரண வகுப்புகளில் முன்பதிவு செய்வதற்கு ரூபாய் 15 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
மறுபுறம் ஆன்லைன் கட்டண முறைகளை அணுக முடியாதவர்கள், மேலும் கூடுதல் செலவுகளை தவிர்க்க விரும்புவர்கள் நேரடியாக ரயில் நிலைய கவுண்டர்களுக்கு சென்று தங்களது டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதாவது ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்து கொள்வது என்பது பயணிகளின் விருப்பமாகும்.
ஆனால் கூடுதல் செலவை தவிர்க்க நினைத்தால் கவுண்டரில் முன்பதிவு செய்வது சிறந்ததாகும். அதுவே வசதியாகப் பயணிக்க வேண்டும் என நினைத்தால் ஆன்லைன் முன்பதிவு என்பது மிக எளிமையான வழியாகும்.