மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்துவது சாத்தியமென கருதப்படுகிறது. இதன் வாயிலாக அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். இதையடுத்து சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். தற்போது ஊழியர்களுக்கு 42 % அகவிலைப்படி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி வருடத்திற்கு 2 முறை உயர்த்தப்படுகிறது.

இதனுடைய விகிதங்களானது ஜூன், ஜூலை மாதங்களில் செயல்படுத்தப்படும். தற்போது அகவிலைப்படி உயர்வு இருப்பின், அதன் விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும். முன்பாக மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி விகிதங்கள் ஜனவரி 1 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்கிடையில் பிட்மென்ட் பேக்டரை 2.60 மடங்கிலிருந்து 3 மடங்காக உயர்த்தி அரசு அறிவிக்கலாம்.

இதனால் அடிப்படை சம்பள உயர்வானது சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது. ஜூலை முதல் அகவிலைப்படியானது எவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவுசெய்யப்படும். அகவிலைப்படி 4% அதிகரிக்கலாம் என்பது இதுவரையிலும் வந்துள்ள தகவல்கள் மூலம் தெளிவாகிறது. அகவிலைப்படி உயர்வுடன் மற்ற கொடுப்பனவுகளிலும் ஏற்றமிருக்கும். இதில் பெரியது வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகும்.