ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்குரிய கடைசி தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தேதிக்குள் ஆதார் கார்டை இணைக்கவில்லை எனில் உங்கள் பான் கார்டு செயலிழந்து விடும். அதோடு பான் செயலிழந்த காலத்தின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது காண்போம். இத்தகைய PAN-களுக்கு எதிராக பணம் திரும்ப பெறப்படாது.

பான்கார்டு செயல்படாமல் இருக்கும் காலத்திற்கு அத்தகைய பணத்தை திரும்பப்பெற வட்டி செலுத்தப்படாது. சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள படி TDS மற்றும் TCS அதிக விகிதத்தில் கழிக்கப்படும் (அ) சேகரிக்கப்படும். ரூ.1,000 கட்டணம் செலுத்தியபின் ஆதாரை பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவித்தவுடன் 30 நாட்களில் மீண்டும் பான் எண்ணை இயக்க முடியும்.

பான் கார்டு செயலிழந்தால் உங்களால் PAN-ஐ வழங்கவோ, தெரிவிக்கவோ (அ) மேற்கோள் காட்டவோ முடியாது. அதேபோல் செயல்படாத பான்கார்டை உபயோகப்படுத்தி வருமானத்தினை தாக்கல் செய்ய இயலாது. மேலும் நிலுவையிலுள்ள வருமானங்களானது செயலாக்கப்படாது. செயல்படாத பான் கார்டுகளுக்கு நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது.