மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அண்மையில் உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் DA-வை ஒரு சில மாநிலங்களானது அதிகரித்தது. அதன்படி ஜார்க்கண்ட் அரசும் தன் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற மாதம் அசாம் அரசு ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை 4% அதிகரித்து மக்களுக்கு பிஹு பரிசு என அறிவித்தது.

சென்ற வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்த முடிவுசெய்யப்பட்டது. இதனிடையில் ஜார்க்கண்ட் அரசாங்கம் தன் ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முன் மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 6ம் தேதி இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது அது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.