சரக்கு போக்குவரத்துத் துறையில் தெற்கு ரயில்வே பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. இதில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 4.05 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. அதோடு 5.2 மெட்ரிக் டன் பெட்ரோலியம் மற்றும் 3.23 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஏற்றப்பட்டது. ரயில்வேக்கு அபரிமிதமான வருவாய் கிடைத்திருப்பத்தை அடுத்து மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டில் வழங்கப்பட்டு வந்த சலுகையை திரும்ப அளிக்க வேண்டும் எனும் கோரிக்கை மீண்டும் எழுந்து உள்ளது.

மார்ச் 2020ல் கொரோனா காலத்தில் மூத்தக்குடிமக்களுக்கு கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகை ரயில்வேயால் நிறுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம். கொரோனா காலக்கட்டத்தில் ரயில்வேயால் முடக்கப்பட்ட அனைத்து வசதிகளும் மீட்டெக்கப்பட்ட போதிலும், பயணிகள் கட்டண சலுகை மீண்டுமாக தொடங்கப்படவில்லை.

இவ்வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகளின் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வேயில் பயணிகளுக்கு முன்பே 55 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் தற்போது வருமானம் அதிகரித்துள்ள நிலையில் கட்டணச் சலுகை மீண்டும் தொடங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் கூறினார்.