மத்திய மோடி அரசாங்கமானது பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். யாருக்கும் ரேஷன் பொருட்கள் குறைவாக கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது. ரேஷன் எடையில் விற்பனையாளர் தவறுசெய்தால், அது தொடர்பாக மக்கள் புகாரளிக்கலாம்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, அனைத்து ரேஷன் கடைகளையும் ஆன்லைன் மின்னணு புள்ளிகளுடன் இணைக்கும் பணி நிச்சயமாக நடக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக இனிமேல் ரேஷன் பொருட்களின் எடையில் குளறுபடிகளுக்கு இடமில்லை. அதன்பின் மக்களுக்கு குறைவான ரேஷன் பொருட்கள் கிடைக்கும் பிரச்சனை இருக்காது.

இதற்கு பிறகும் உங்களது ரேஷன் பொருட்களின் அளவு குறைவாக இருப்பின், அதிகாரப்பூர்வதளத்தில் ஆன்லைன் புகாரையும் பதிவுசெய்யலாம். ரேஷன் விநியோக முறையை சரி செய்ய அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.