சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக உண்ணாவிரத போராட்டமானது நடந்தது. அந்த பிரிவின் துணைத் தலைவர் நாச்சியப்பன், லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி உள்ளிடோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அதோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கனல் கண்ணன், வேலூர் இப்ராகிம், கேசவ விநாயகன், வி.பி.துரைசாமி, கருநாகராஜன் போன்றோர் கலந்துகொண்டனர்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது, பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத்துறையை நீக்குவது தான் என்று தெரிவித்தார். மேலும் இந்து கோயில்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம், ஆனால் நிர்வாகம் செய்யக்கூடாது. ஆகம விதிமுறைகளில் அரசு தலையிடக்கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும். மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது என்று அவர் கூறினார்.