
சுந்தர்.சி இயக்கத்தில் ஹிட்டான திரைப்படம் அரண்மனை. இதன் அடுத்தடுத்த பாகங்கள் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. ஹாரர் திரைப்படங்களுக்கென ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், அவர்களுக்காக சுந்தர்.சி தொடர்ந்து அரண்மனை அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார். இப்போது அரண்மனை-4 படத்தை சுந்தர்.சி எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதியும் , சந்தானமும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் விஜய்சேதுபதி இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் சூட்டிங் தொடங்க இருப்பதாகவும், அதற்கு தேதி ஒதுக்க முடியாததால் அவர் விலகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.