தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை சென்ற 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த நிலையில் 18 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதன்பின் இருவரும் அவர் அவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

சென்ற வருடம் தனுஷ் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியானது. அதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ஐஸ்வர்யா தற்போது ஆல்பம் பாடலை இயக்கி முடித்து லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கின்றார். தற்போது படத்திற்கான பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் ஐஸ்வர்யா நடந்து கொள்ளும் விதம் பிடிக்காமல் ஆடை வடிவமைப்பாளர் படத்தை விட்டு விலகியதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கை விஷ்ணு விஷாலுக்கும் பிடிக்காததால் அவரும் விலக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்குகின்றார். அந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தற்போது மோதல் ஏற்பட்டிருப்பதால் அதை பயன்படுத்தி தனுஷ் விஷ்ணு விஷாலை தனது திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்து இருக்கின்றாராம். இது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.