விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. மும்பையில் உள்ள தலைமை வருமான வரி ஆணையர் அலுவலகம், வருமான வரி ஆய்வாளர், ஸ்டெனோகிராபர் கிரேடு-II, மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், இதர பதவிகளுக்கு திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் incometaxmumbai.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.