இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள எம்கே மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிஜேபி ஆட்சியில் மத வெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு கொடுத்திருக்கிற 4 சதவீத இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து உள்ளனர்.

உச்சநீதிமன்றம் இதையெல்லாம் நிறுத்தக் கூடாது கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் அனைத்தும் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் இல்லை. அரேபியாவுக்கு பலர் போயிருக்கவே மாட்டார்கள். இங்குள்ள முஸ்லிம்களின் முன்னோர்கள் சனாதன கொள்கை, இந்து மதத்தில் இருக்கிற ஜாதிய வேறுபாடு வெறித்தனத்தின் காரணமாக இஸ்லாமியர்களாக கிறிஸ்தவர்களாக மாறியிருக்கின்றனர்.

மற்றபடி நாமெல்லாம் ஒன்று தான். நாம் எல்லாம் ஒன்று என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. அம்பேத்கர் சிலைக்கு மாலை போட பா.ஜ.க-வினருக்கு என்ன தகுதியுள்ளது?. பா.ஜ.க-வின் அரசியலை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். நம்மை பிரித்து சண்டையிட வைக்க பா.ஜ.க முயற்சிக்கிறது என அவர் ஆவேசமாக பேசினார்.