தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அப்படி இல்லை. அண்ணே… பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி பிரச்சனை. அவுங்க என்னை பார்க்கவில்லை, இவுங்க என்னை பார்க்கவில்லை என நிறைய பேரு சொல்லுவார்கள். அந்த

தலைவருக்கு சேர் போடல…. இந்த தலைவர் அப்படி போடல என  பேசுவாங்க.  இந்த கட்சியினுடைய பியூட்டியே…  இதைப்போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு இடையே ஜனநாயகத்தை  வளர்ப்பது தான் இந்த கட்சி. உலகத்திலேயே உண்மையான பரிபூரணமான தலையிலிருந்து கால்வரை முழுவதுமான ஒரு ஜனநாயக கட்சியாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி. நேச்சுரலி பிரச்சனைகளும் அதிகமாக தான் இருக்கும்.

ஏனென்றால்  அண்ணாமலை ஆர்டர் போட முடியாது.  அண்ணாமலையும் இந்த கட்சியில் ஒரு தொண்டன், சேவகன்.  எல்லாத்துக்கும் இழுத்து,  பேசி….  அத பண்ணலாமா ? இது பண்ணலாமா ?  என யோசிக்க முடியும். கிளை தலைவர் ஆர்டர் போட முடியாது.  கிளை தலைவரும் இந்த கட்சியில் ஒரு தொண்டன்,  ஒரு சேவகன் எல்லாத்தையும் இழுத்து பேசி சரி பண்ணி தான் கொண்டு போகணும்.

இல்ல பொறுப்பாளராக இருக்கக்கூடிய கருநகராஜன் அண்ணன் ஆர்டர் போட்டு மிரட்டலாமா ? அவருக்கும் அந்த அதிகாரமும், உரிமையும் இல்லை.  ஏனென்றால் அவரும் இழுத்து பேசி, எல்லாத்தையும் அரவணைத்து தான் கொண்டு போக முடியும். இல்ல பெரிய பெரிய தலைவர்கள் மேடையில் இருக்கிறாங்க….  அவங்க செய்யலாமா ? இல்லை. அதாவது டெமோகிரஸியில் நாம் செய்யக்கூடிய பணிகள் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால்,  அது ஜனநாயக முறையிலே செய்தால் மட்டும் தான் அது நிரந்தரமாக இருக்கும் என தெரிவித்தார்.