செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே…..  ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல…  இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முழுக்க ரோடுகள் பாருங்க குண்டும் குழியுமாக இருக்கிறது. அரசாங்கம் செய்யக்கூடிய கட்டிட பணிகள்…. சமூக கூடமாக இருக்கலாம். அல்லது அரசு கட்டிடங்களாக இருக்கலாம்…  அந்த பணிகள் எல்லாம் ஒன்னும் தரமானதாகவே இல்லை.

அதெல்லாம் போய் தள்ளுனா அப்படியே விழுந்துடுது அந்த மாதிரி தான் பல வீடியோக்களை நாம பார்க்க முடியும். மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு செய்யக்கூடிய உதவியை….  மத்திய அரசாங்கம் மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய திட்டத்தை…..  மத்திய அரசாங்கம் மக்களுக்கு வழங்கக்கூடிய உணவு தானியங்கள்….. ரேஷன் கடையின் மூலமாக வழங்கக்கூடிய  உணவு தானியங்கள் திட்டத்தை….  இதை எல்லாவற்றையுமே இங்கு தமிழ்நாட்டை சரியாக அமுல்படுத்த முடியாமல் இந்த அரசாங்கம்,  திராவிட மாடல் என்ற பெயரிலே தடை செய்து வருகிறது….

இந்த இரண்டரை ஆண்டு காலத்திலே மிக மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது….  எனவே இந்த ஆட்சி போக வேண்டும்…  என்கின்ற அதிருப்தி…..  இந்த ஆட்சியின் மீது வெறுப்பு….  மக்களுக்கு இப்பொழுது உருவாகியிருக்கிறது…..  அது 2024 தேர்தலிலே எதிரொளிக்கும்……  நிச்சயமாக தமிழகத்தில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் உருவாகும்.

ADMK EX மந்திரிகள் மேலேயும் ஊழல் குற்றச்சாட்டுகள்  இருக்கு.  இதையெல்லாம் நாங்க எங்க ஆட்சியில் இருந்த போது போடப்பட்ட வழக்குகள் அல்ல.  பொன்முடி மேல இருக்கின்ற  வழக்காக இருக்கலாம்…..  அல்லது அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இருக்கும் வழக்காக இருக்கலாம்….  எல்லாமே அவங்க ஆட்சியில்,  இவங்க சொன்ன குற்றச்சாட்டு வழக்குகள் தான் இப்போ நடைமுறையில் வந்துட்டு இருக்கு.

அதனால்தான் பெருந்தலைவர் காமராஜர் இதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்னாரு…  அதனால் இதுல ஏடிஎம்கே சாப்ட் கார்னர்,  டிஎம்கே சாஃப்ட் கார்னர் என்பதே கிடையாது.  ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது நரேந்திர மோடியின் உடைய லட்சியம். அதிலே மிகத் தெளிவாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்திலே ஊழலை ஒழிப்பதிலே நம்பர் ஒன் தலைவர் அண்ணாமலை தான்.

மிகத் தெளிவாக மக்கள் மன்றத்திலே இவர்கள் முகத்திரையை கிழித்து,  இவர்களுடைய பைல்ஸ் எல்லாம் வெளியிட்டு….  ஆதாரபூர்வமாக மக்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்,  செயல்பட்டும்  வருகிறார். அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு அற்புதமான தலைவராக பரிணமித்திருக்கிறார். ஒரு நல்ல தலைவராக இப்பொழுது வருகை தந்திருக்கிறார்.  அண்ணாமலை அவர்களின் உழைப்பு இந்த தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.