
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சிம்ரன். இவர் “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கு முன்பாக “குட் பேட் அக்லி” என்ற திரைப்படத்தில் நடிகை சிம்ரன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சிம்ரன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது “நடிகை ஒருவர் தான் நடித்து வரும் கதாபாத்திரங்களை கேலி செய்து வருவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவர் நடித்து வரும் கதாபாத்திரங்களை விட நான் எடுக்கும் கதாபாத்திரங்கள் சிறந்ததாகவே உள்ளது” என்று பேசியிருந்தார். அதாவது டப்பா ரோளை விட ஆன்டி ரோலே சிறந்தது என்று சிம்ரன் கூறிய நிலையில் அந்த நடிகையின் பெயரை சொல்லவில்லை.
இவர் கூறியது இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் அந்த பெயர் சொல்லப்படாத நடிகை யார் என விமர்சித்து வருகின்றனர். அந்த நடிகை ஜோதிகா அல்லது லைலாவாக இருக்கும் என்று கணித்து பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் சிம்ரன் ஒரு நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்ததை பற்றி மீண்டும் பேசியபோது, “நான் யாரை குறிப்பிட்டு பேசினேனோ, அந்த நடிகையே என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று பேசியதாக தெரிவித்தார். மேலும் நடிகை சிம்ரன் அந்த நடிகை யார் என்று மக்கள் அவர்களின் எண்ணத்தில் தோன்றியதை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.