செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறும். அதே நேரத்தில் அடுத்த ஆப்ஷன் சொன்னேன்.  ஒரு வேலை நாங்கள் கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை வந்தால்,  தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறோம் என சொல்லி உள்ளேன். இது எல்லாம் உரிய நேரத்தில் அதற்கான முடிவை எடுத்து அறிவிப்போம் என சொல்லி இருக்கேன்.

அதனால அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க பூத்து கமிட்டி அமைக்குற வேலையை செய்யுங்க. இங்கு வந்து இருக்க கூடியவர்கள் அவர்கள்தான் அந்த பணியில் கட்சியை நடத்திக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் தான் பூத் கமிட்டி அமைக்கணும். அந்தப் பணியை செய்யுங்க என சொன்னேன். நாங்க எந்த கூட்டணிலையும் முந்தி கொண்டு…  யாரையும் சந்திக்கணும்னு அவசியம் இல்லை. எங்களுடைய உள்ளங்கள் நல்ல உள்ளங்கள் என்றைக்கும் எங்களுக்கு ஆதரவா இருப்பாங்க.

இந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு சிறப்பான செயல்பாட்டை அம்மாள் மக்கள் முன்னேற்ற கழகம் செய்யும். மத்தியில ஆளுகின்ற பிரதமரை தேர்ந்தெடுப்பதிலே அணிலை போன்ற ஒரு சிறப்பான பணியை அம்மா மக்கள்  முன்னேற்ற கழகம் செய்யும் என நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதைத்தான் திரும்பவும் சொல்லுறேன். பாஜக அல்லது காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தான் பிரதமர்  வேட்பாளரை கொடுக்கக் கூடியவர்கள். அந்த கூட்டணியிலும் இருக்கலாம், தனித்தும் போட்டியிடலாம்.

ஏனென்றால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் யாரையும் நம்பி ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் கிடையாது. இது தொண்டர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காக முயற்சி செய்த இயக்கம்.  எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.  தமிழ்நாடு முழுவதும் லட்சோப லட்சம் தொண்டர்கள் எங்களோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் வெற்றியை  அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம் எனடிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.