சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய திமுகவில் இளைஞர் அணி மாதிரி, பாஜகாவில் பல அணிகள் இருக்கு. அதுல ஒரு அணி தான் இந்த ஐடி அணி, ED அணி எல்லாம்.

அவங்க தொடர்ந்து ரெய்டு எல்லாம் விட்டா, நாம பயந்துறுவோம்னு நினைக்கிறாங்க. ஒன்றிய பிரதமர் திரு மோடி அவர்களே….  உங்களுடைய ஈடி, ஐடி ரெய்டு இதற்கெல்லாம் எங்களுடைய முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள்…  எங்களுடைய கிளைச் செயலாளர்கள் கூட, உங்களை பார்த்து பயப்பட மாட்டான். நாங்கள் அந்த அளவுக்கு  யாரைப் பார்த்தோ பயப்பட மாட்டோம். இன்றைக்கு ஒன்றிய பிரதமர் திரு. மோடி… அவருக்கு எங்க போனாலும் என் ஞாபகம் தான், நம்முடைய திமுக ஞாபகம் தான், முக்கியமா என் ஞாபகம் தான்.

எங்க ராஜஸ்தான்ல போய்,  என்ன பத்தி பேசிட்டு இருக்கிறாரரு? இந்த மாதிரி உதயநிதி இப்படி பேசிட்டாருனு,  என்ன பத்தி பேசுறாங்க….  என்னை யாருனு கூட தெரியாது. அதுவும் நான் பேசாதத பேசி, பொய் செய்தியா பேசி, பொய்யா பரப்பி, பூதகரமாக்கி… இப்போ நீதிமன்றத்தில இருக்கு, நீதிமன்றத்தின் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா நீதி கிடைக்கும்னு நம்புகிறேன். என்ன மன்னிப்பு கேட்டாங்க, மன்னிப்பு  கேளுங்க அப்படின்னு சொன்னாங்க… நான் சொன்னேன் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன் பேசினால் பேசுனது தான், கொள்கையை தான் பேசி இருக்கிறேன். நான் எதுவும் தவறா பேசல அப்படின்னு சொல்லிட்டேன்.

நான் கலைஞர் பேரன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருடைய பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகன். ஆமாம், வாரிசு தான். நான் மட்டும் கிடையாது. இங்க இருக்கக்கூடிய நீங்க ஒவ்வொருத்தரும், ஏதோ கூடுனோம், கை தட்டுனோம், பேச்ச கேட்டோம், கலைஞ்சி  போற கூட்டம் கிடையாது இந்த இளைஞரணி கூட்டம்…  கொள்கை கூட்டமா இருக்கணும்….கொள்கை வாரிசுகளா இருக்கணும்…..  நான் மட்டும் கலைஞருடைய வாரிசு கிடையாது. நீங்கள் அத்தனை பேரும் தந்தை பெரியாருடைய கொள்கை வாரிசு….பேரறிஞர் அண்ணா உடைய கொள்கை வாரிசு… முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கொள்கை வாரிசு கூட்டம் தான் இந்த இளைஞர் அணி என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அதற்குத்தான் நம்முடைய தலைவர் அவர்கள், அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

டிசம்பர் 17-ஆம் தேதி நீங்கள் அத்தனை பேரும், இதே எழுச்சியோடு வந்து, மாநாட்டில் கலந்து கொண்டு, இந்த மாநாட்டை மிகப்பெரிய ஒரு வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டுவீர்கள் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. சேலத்தில் பல்வேறு பகுதிகளில் வந்திருக்கிறீங்க…. அத்தனை பேரும் பாதுகாப்பாக வீடு போய் சேருவீங்க,  அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சென்ற சட்டமன்ற தேர்தலில 2021ல் அடிமைகளை விரட்டி   வீட்டுக்கு அனுப்பினோம். அதேபோல 2024-ல அடிமைகள் உடைய எஜமானர்கள், ஓனர்சையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று பேசி முடித்தார்.