அதானி,  பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையில் கேள்வி எழுப்ப முயற்சி மொய்த்ரா பணம் வாங்கியதாக தொழிலதிபர் ஹிராநந்தானி குற்றம் சாட்டியுள்ளார். மெய்த்ரா மீது இதேபோன்று பல புகார்களை பாரதி ஜனதா  கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபேவும்  தெரிவித்துள்ளார்.தன் மீதான குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்ற நன்னடத்தை குழு முன்பு மொய்த்ரா ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மகுவா மொய்த்ரா சற்று நேரத்திற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து நெறிமுறைகள் குழு கூட்டத்தின் முன்பு ஆஜராக இருக்கின்றார். குழுவின் தலைவர் மாற்று உறுப்பினரிடம் பல்வேறு விவரங்களை கேட்டு அறிய இருக்கிறார்கள்.  அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள புகார் படி மகுவா மொய்த்ரா நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும்  கடவுச்சொல் ஆகியவற்றை ஹிராநந்தானிஎன்ற தொழிலதிபருடன் பகிர்ந்து கொண்டார் எனவும்,  ஹிராநந்தானி அவற்றை பயன்படுத்தி நாடாளுமன்றத்திலேயே பல்வேறு கேள்விகளை கேட்டார் எனவும் சொல்லப்படுகிறது.

47 முறை துபாயிலிருந்து ஹிராநந்தானி இந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி,  நாடாளுமன்ற மகுவா மொய்த்ரா உடைய மின்னஞ்சலை பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. இதைத்தவிர மகுவா மொய்த்ரா அவரிடம் இருந்து பல பரிசுகளை பெற்றுக் கொண்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இன்னொரு புறம் மகுவா மொய்த்ரா 15 முறை நாடாளுமன்ற சபாநாயகருக்கு தெரிவிக்காமலே வெளிநாட்டுக்கு சென்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆகவே இந்த குற்றச்சாட்டுக்கு எல்லாம்  மகுவா மொய்த்ராவின்  விளக்கம் என்ன ? என்பதை கேட்டறிய இன்று அவரை குழு  அழைத்திருந்தது.  அதன்படி குழுவின் முன்  ஆஜராகி இருக்கிறார்.  தற்போது குழுவின் கூட்டம் தொடங்கி,  அங்கே மகுவா மொய்த்ரா தன்னுடைய விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார். மகுவா மொய்த்ரா தரப்பு ஆதாரங்களை பரிசீலித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என குழுவின் தலைவர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகுவா மொய்த்ரா தன் மீது குற்றம் சாட்டியவர்கள் என்னென்ன புகார்கள் அளித்திருக்கிறார்களோ,  அந்த புகார்களுக்கு அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாக  தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் நேற்று கடிதம் ஒன்று அனுப்பிருந்தார். ஆகவே இந்த கடிதம் இன்று ஏற்றுக்கொள்ளப்படுமா ?  மகுவா மொய்த்ரா தரப்பு ஆதாரங்களை குறித்து குழுவின் தலைவர் என்ன முடிவெடுப்பார் ? போன்ற பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் இன்று எதிர்பார்க்கப்படுகின்றன.