பாகிஸ்தானை சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் whatsapp மூலம் போன் கால் செய்து மோசடி செய்து வருவதாக தற்போது சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே whatsapp நம்பருக்கு +92 என்று தொடங்கும் நபரில் இருந்து போன் கால் வந்தால் யாரும் எடுக்க வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மோசடியான தகவல்களை கூறி பணம் பறிக்கிறார்கள். இந்நிலையில் whatsapp டிபியில் போலீஸ் சீருடை அணிந்தவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு உண்மையான போலீஸ் பேசுவது போல் நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

எனவே இது போன்ற மோசடிக்காரர்களிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் ஆக்ராவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உங்களுடைய மகள் விபச்சாரம் செய்கிறாள் உடனடியாக ஒரு லட்ச ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் போலீஸ் பேசுவது போல் இந்த நம்பரில் இருந்து ஒரு போன் கால் வந்தது. இதை நம்பி அந்தப் பெண் தன் மகளிடம் விசாரித்த போது அது பொய் என்பது தெரிய வந்தது. இருப்பினும் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் அந்தப் பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். இது போன்ற மோசடி அழைப்புகளில் இருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது