இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பொது மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். அதன்படி இளைஞரிடம் பெண் ஒருவர் வங்கி அதிகாரி போல பேசி நூதனமாக மோசடி செய்துள்ளார்.

சென்னையை சேர்ந்த அந்த இளைஞரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்ட பெண் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தி தருவதாக கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்பந்தம் தெரிவிக்க மொபைலுக்கு வரும் ஓடிபி கேட்டு பெற்றுள்ளார். உடனே அவரது கார்டில் இருந்த 81 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ள நிலையில் தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.