
18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம்; புயலாக உருவானால் ‘Hamoon’என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கதேசத்தின் கேபுபாரா, சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.