தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் கூறியுள்ளது.