
திருப்பூரிலுள்ள மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் சாதனா அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதையில் வந்து குடும்பத்தில் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாதனா வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மது போதையில் அவரது தந்தை தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சாதனா தந்தையிடம் குடிப்பழக்கத்தை கைவிடும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் தரை குறைவாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சாதனா கருப்பராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த நல்லூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று உடலை தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் காலையில் பணி நடந்தது. அதில் மாணவியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.