மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாக உள்ளார். இவர் தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது எனக்கூறி இருமொழிகளிலும் வாய்ப்பு தேடுகிறார். ஆகவே அவர் விரைவில் தமிழ் திரைப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில் தன் அழகு ரகசியம் குறித்து ஜான்வி கபூர் பேட்டி அளித்ததாவது “என் அழகு ரகசியம் யோகா மற்றும் உடற்பயிற்சி. வேலையில் எவ்வளவு பிசியாக இருந்தாலும்கூட தவறாமல் ஜிம்முக்கு போவேன். உடல், மனம் ஆகிய இரண்டையும் ஒருமைப்படுத்த முடிந்தால் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களோடு முன்னேறலாம். என் பார்வையில் உடற் பயிற்சி என்றால் ஜிம்முக்கு செல்வது மட்டுமில்லை.

பல்வேறு வழிகளில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். எடை தூக்குவது, கார்டியோ, நீச்சல், யோகா ஆகியவற்றை செய்கிறேன். உடற்பயிற்சியோடு யோகா செய்வது நல்ல பலனை அளிப்பதோடு, அழகையும் தரும். என்னுடைய சினிமா வாழ்க்கை சம்பந்தமான ஏற்றத் தாழ்வுகள், கஷ்ட நஷ்டங்களை எதிர்கொண்டு மகிழ்ச்சியாக முன்னேற யோகாவும் உடற்பயிற்சியும் தான் காரணம்” என்று அவர் பேட்டி அளித்தார்.