
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையின் அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த வகையில் அஜித்குமார் உடலில் சிகரட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்து உள்ளதாக மருத்துவ அறிக்கை மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு வயிற்றின் நடுவே குத்தி காயப்படுத்தியதாகவும், தலையில் கம்பை வைத்து அடித்ததால் மூளையில் ரத்தக் கசிவும், உடலில் 50 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர் கூறியதாவது, அஜித்துக்கு கஞ்சா கொடுத்து அடிச்சாங்க. அஜித் தண்ணீர் கேட்கும் போது மிளகாய் பொடி போட்டு கொடுத்தாங்க. தண்ணீர் வேணும் தண்ணீர் வேணும் என அவர் கதறும் போது அந்த போலீஸ் ராஜா நெஞ்சிலேயே மிதிச்சாரு. மூச்சு விட ஏங்கினான். அதை பாக்கும்போது அஜித்தை எப்படி எல்லாம் மிருகத்தனமாக தாக்கினார்கள் என வேதனையுடன் கூறினார்.