சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமாரும் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அவர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நவீன் குமாரின் தாய் மாமா கூறியதாவது, நவீன் மருத்துவமனையில் காலில் வலி ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிவடைந்து சிறிது நேரத்தில் நவீன் குமார் வீடும் திரும்பிவிட்டார் என கூறியுள்ளார். இதுகுறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நவீன் குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எக்ஸரே எடுத்ததில் ரத்த காயம் எதுவும் இல்லை. பாத வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளது.