
இந்தியா நகரங்களில் பலவற்றில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் காற்றின் தரம் குறைந்து வருகின்றது. காற்றின் தர குறியீடு 0 – 50 இருந்தால் குறைந்தபட்ச தாக்கம். 51 – 100 என்றால் உணர்திறன் உள்ளவர்களுக்கு சிறிய சுவாசக் கோளாறு 101 – 200 என்றால் நுரையீரல், ஆஸ்துமா, மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும் 21 – 300 என்றால் நீண்ட நேரம் வெளிப்படும் போது பெரும்பாலானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதோடு 31 – 400 என்றால் சுவாச நோய் ஏற்படும், 41 – 500 என்றால் ஆரோக்கியமான மக்களை பாதிக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக பாதிக்கும். இந்நிலையில் 241 இந்திய நகரங்களின் மாசு அளவு பட்டியலை நேற்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள நிலையில் 10 நகரங்களில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் பல்கலை பேரூர் 20 என்ற நல்ல காற்றின் தர குறியீட்டுடன் முதல் இடத்திலும், ராமநாதபுரம் 25 என்று குறியீட்டுடன் நான்காம் இடத்திலும் 29 என்ற குறியீட்டுடன் மதுரை ஏழாம் இடத்திலும் உள்ளது.
பல்கலைபேரூர் (20) பாலசோர் (23) ஐஸ்வால் (25) ராமநாதபுரம் (25) சிக்கபல்லாபூர் (28) மடிகேரி (29) மதுரை (29) சிக்கமகளூரு (30) காங்டாக் (30) நாகோன
மோசமான காற்றின் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி 306 AQI உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தக் குறியீடு ‘மிகவும் மோசமானது’ என்ற வகையைச் சேர்ந்தது,
டெல்லி (306) மீரட் (293) காசியாபாத் (272) பிவானி (266) ஹாப்பூர் (261) ஜிந்த் (261) சர்க்கி தாத்ரி (260) ஜுன்ஜுனு (260) பாக்பத் (257) அனுமான்கட்(255)