மத்திய அரசின் பி.எம் விஷ்வகர்மா திட்டத்தின் மூலம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாதது அவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த திட்டத்தின் மூலம் அவர்களின் உள் கட்டமைப்பை சீரமைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்.‌ இந்நிலையில் பிரதமரின் கைவினை கலைஞர்கள் திட்டம் தொடர்பாக பட்ஜெட்டுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று காலை உரையாற்றினார்.

மேலும் எளிதில் கடன் கிடைக்க ஏற்பாடு, மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ஏற்பாடு, உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு இணைப்பை ஏற்படுத்தி சந்தைப்படுத்துதல் மற்றும் ஆதரவு வழங்குதல், திட்டத்தின் கட்டமைப்பு, பயனாளிகளின் தேர்வு, செயல்பாட்டு நடைமுறை ஆகிய அமர்வுகளாக இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.