கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து இருக்கின்றனர்.

மத்திய நிதியமைச்சர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை வந்திருந்தார். ஸ்வச் பாரத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பள்ளி குழந்தைகளுடன் உரையாடி சந்திராயன் குறித்து பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் நடந்த  மாபெரும் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் அமுல் கந்தசாமி, ஏ கே செல்வராஜ் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக அவர்கள் மூவரும்  நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். நிகழ்ச்சிக்காக வரவேற்பதற்காக நேரடியாக அங்கு சென்றிருந்தபோது இந்த சமதிப்பு நடந்துள்ளது. இது நிகழ்ச்சிக்கான சந்திப்பா ? அல்லது அரசியல் தொடர்பான விஷயங்கள் பேசப்பட்டதாக குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.