
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என கூறிவிட்டு தற்போது கூட்டணி ஆட்சி என அவங்க கூட போய் சேர்ந்து விட்டது அதிமுக.
பாஜக தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் எனில் அவர்களை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுக. ஆனால் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் பாராளுமன்றத்தில் நமது குரலை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் சீரமைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறவர் நம் முதலமைச்சர்.
முதலில் ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது புரிய வேண்டும். பின்னர் ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும்.
புதிதாக அரசியலுக்கு வந்துவிட்டு, எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியாமல் ஜெயித்து விடுவேன் என நினைப்பது அறியாமை ஆகும்.
என்னவென்று வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் எல்லாம் இன்றைக்கு தேர்தலில் நின்று வாக்கு கேட்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த இடத்திலும் தடை இல்லாமல் கொண்டு செல்ல கூடிய ஒரே ஆட்சி திமுக ஆட்சி மட்டும் தான். அதே சமயத்தில் மக்களின் உரிமைகளையும், பாதுகாக்க கூடிய ஆட்சி என எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு இது என கூறினார்.