ஜாக்கி சான் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘தி மித்’ என்ற படத்தின் இரண்டாம் பாகமான ‘தி லெஜென்ட்’ என்ற பெயரில் தற்போது ஜாக்கி சான் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் ஜாக்கி சான் நடிக்கிறார். ஆராய்ச்சியாளராக ஒரு கதாபாத்திரலும், இளமையான போர்வீரராகவும் நடிக்க இருக்கிறார்.

இந்த இளம் கதாபாத்திரத்திற்காக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இளம் ஜாக்கி சானைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.