தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் வளர்ந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக போலியான ஆபாசம் நிறைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை எவ்வாறு தடுக்கலாம் என மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

போலி வீடியோக்கள் தொடர்பாக மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார், மேலும், இன்னும் 3,4 நாட்களில் சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளா