
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் புதிய அறிவுரையை அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் பொருள்கள் இறக்குமதி செலவு கட்டுக்குள் கொண்டு வரவும், காற்று மாசுபடுதலை தடுக்கவும், வாகனங்களில் பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி வருகிறது. இதன்படி கச்சா எண்ணெய்களை தவிர்த்து இயற்கை எரிவாயு பயன்படுத்துதல். இதனைப் பின்பற்றி தமிழகத்தில் 1.17 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனை பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு எரிவாயு செலவு குறைகிறது. மேலும் சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் 25-30% எரிவாயு செலவு குறைவதால் பொதுமக்கள் பலரும் CNG வண்டிகளை வாங்க விரும்புகின்றனர். இந்த இயற்கை வாயுவை கார்களுக்கு அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு (compressed natural gas) ஆக பயன்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு குழாய் வழி எரிவாயு (piped natural gas) இது எல்பிஜி (LPG) களுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.