பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘திரௌபதி 2’ படத்திற்கு, அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளைச் சொல்லும் எனப் படக்குழுவினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதே நாளில் 2011-இல் வெளியான அஜித்தின் பிளாக்பஸ்டர் படமான ‘மங்காத்தா’ தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸானது.

அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தைக் கொண்டாட திரையரங்குகளை ஆக்கிரமித்ததால், ‘திரௌபதி 2’ படத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து மோகன் ஜி வெளியிட்டுள்ள வீடியோவில், “மங்காத்தா திரைப்படத்தின் கூட்டத்தால், எங்கள் படத்தின் ஆடியன்ஸ் கருத்தைப் பதிவு செய்ய முடியவில்லை. பொங்கலுக்குத் தியேட்டர் கிடைக்காததால் படத்தை இந்த வாரத்திற்குத் தள்ளி வைத்தது மிகப்பெரிய தவறாகப் போய்விட்டது” என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், படம் பார்க்காமலேயே பலர் தவறான கருத்துகளைப் பரப்புவதாகவும், மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார். அஜித்தின் ‘மங்காத்தா’ அலை கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வசூல் சாதனைகளையே முறியடித்து வரும் நிலையில், ஒரு புதிய படத்திற்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.