அதானி விவகாரம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சச்சையான பேச்சால் ஏற்பட்ட போராட்டம் என பல்வேறு நிகழ்வுகள் பாராளுமன்ற கூட்டத் தொடரில் நடந்து முடிந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தாய் மற்றும் தங்கையுடன் தனியார் ஹோட்டலில் மதிய உணவு அருந்தினார். இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட டெல்லியில் உள்ள ஒரு பிரபல தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகள் மரியா வதேரா மற்றும் ராபர்ட் வதேராவின் தாயார் ஆகியோர் நேற்று சென்றனர்.

இவர்கள் அந்த ஹோட்டலின் சிறந்த உணவான சோலே பதுரா மற்றும் பல வகையான உணவுகளை அவர்கள் உண்டனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவாலிட்டி உணவகத்தில் மதிய உணவு எனக் குறிப்பிட்டு, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் குடும்பத்தோட உள்ள படம் என்றாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என மூன்று எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.