
வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
தற்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தேர்தல் தடை கோரிய ஓபிஎஸ் தரப்பு மனு நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரும் தேர்தல் தடை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சிக்கல் வருமா? என கேள்வி எழுந்துள்ளது.