
நீங்கள் சொல்கிறீர்கள் பாஜக வலுவாக இருக்கிறது என்று.. ஆனால் அதிமுகவின் பதிலடிகளை பார்க்கும்போது அப்படி தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அவர்களுக்கு எதற்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு என் வேலை இருக்கின்றது. 7 மணி நேரம் நடக்கிறேன், 6500 கலோரி இழக்கின்றேன். நாலு மணி நேரம் தூங்குறேன், காலைல எந்திரிச்சி மக்களை பார்க்கிறேன்.
எனக்கு என் வேலையே தலைக்கு மேல இருக்கும்போது நான் ஏன் கமெண்ட் பண்ணனும் ? அந்த கமெண்ட்டுக்கு அவர்களே பதில் சொல்லுவாங்க.நீங்க சொன்ன மாதிரி முன்னாள் அமைச்சர் ஒருத்தர் சொல்லுறதுக்கு, முன்னாள் அமைச்சர் இன்னொருத்தரு கருத்து சொல்லுவாங்க. அதுவே பதிலா இருக்கும். நாம ஏன் புதுசா கருத்தை சொல்லணும் என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்கள் கடைசி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நான்கு சீட்டு வெற்றி பெற்றது பிஜேபி என்ற கேள்விக்கு, இல்லை என மறுப்பு தெரிவித்த அண்ணாமலை அதிமுக – பாஜக கூட்டணி என்ன கூறினார்.
இப்போ ஏடிஎம்கே கூட்டணியில் இல்லை என்று சொன்னால் எத்தனை சீட்டு வெற்றி பெறுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, எனக்கு தெரியாது. நான் ஜோசியர் கிடையாது. நான் ஒரு கட்சித் தலைவர். என்னை பொருத்தவரை இந்த கட்சி இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கி பிஜேபிக்கு இருக்கு என தெரிவித்தார்.