நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சீன பெரும் தேசத்தின் புரட்சியாளன் Mao Zedong, பெரும்பயணம் போகிறபோது…  பல பேர் இறந்து போகிறார்கள். உயிர் அற்றவர்கள் உடலை தூக்கி சுமப்பது சிரமம். அங்கங்க அங்கங்கே தோண்டி புதைத்து கொண்டு போகிறார்கள்.  வீரர்கள் சோர்ந்து விடக்கூடாது என்று Mao Zedong சொல்லுகிறார்….  இறந்தவர் போக இருப்பவர் முன்னேறுக…  பிரபாகரனின் தம்பி சீமான் சொல்லுகிறேன்…  சென்றவர் போக,  நின்றவர் போராடுக…எவரை நம்பி நாம் தமிழர் கட்சி இல்ல.

நான் குட்டையில்… குளத்துல தூண்டி வீசல. வலை வீசல.. கடல்ல.. பெரும் கடல்ல… தமிழ் தேசிய இனம் என்ற பெரும் இனத்தின் இயக்கத்தை கட்டி போயிட்டு இருக்கேன். உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.. நான் கடைசி தமிழன நம்பியா கட்சி வச்சிருக்கேன். எட்டாம் வகுப்பு படிக்கும் போது  ஒருத்தன் பாத்தேன் என சொல்லுறான்.

அவன் இன்னைக்கு வழக்குக்கு கையெழுத்து வாங்கிட்டு போறான். அண்ணே அன்னைக்கி எட்டாம் வகுப்பு படிக்கும் போது வாழ்த்துனிங்க…  உங்க கூட படம் எடுத்துக்கிட்டா அண்ணே.. அப்படின்னு சொன்னான். நம்ம கட்சியில தான் வேலை செய்றேன்னு கையெழுத்து வாங்கினான். பெரும் பொறுப்பும், கடைமையும் கையளிக்கப்பட்ட இருக்கு.

எப்படிப்பட்ட ஆர்வத்துல இருக்கேன்ன்னு வச்சிக்க….  என் உடன்பிறந்தவன்.. நீ முதல்ல ஒன்னு முடிவு பண்ணிக்கணும். . நீ அடிமை.  உனக்கு ஒன்னும் இல்ல. அது முடிவு பண்ணிக்கனும்.  தெரிஞ்சுக்கணும். அண்ணா என்ன நமக்கு குறை…. எங்க நாம அடிமையா இருக்கோம். ஹேய்… உனக்கு என்ன தெரியுது ? ஒரு புது படம் வரணும்.

பண்டிகைன்னா….  என்ன காலையில குளிக்கணும், பணியாரம் சாப்பிடணும், சரக்கு அடிக்கணும். புதுசா படம் பாக்கணும். பண்டிகை ஓவர்.  முடிஞ்சிச்சு. அது இல்லையே… அது இல்லையே வாழ்க்கை…. வாழ்க்கை அது இல்ல .பிழைப்பது வேறு, வாழ்வது என்பது வேறு. நாம் வாழ வில்லை.  பிழைத்து கொண்டிருக்கிறோம். வாழ்வது என்பது செம்மார்ந்து வாழ்வது…  வறுமையிலும் செழுமையாக வாழ்வது….  அந்த வாழ்க்கை முறை வேறு,  இப்பொழுது நம்ம நிலபரப்புக்கு என்று எந்த உரிமையும் இல்ல… எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டான். கல்வி உரிமை இல்லை, மருத்துவ உரிமை இல்லை, எதுவுமே இல்லை என தெரிவித்தார்.