
சமூக ஊடகங்களில் புதையல் வேட்டை குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை புதையல் வேட்டைக்காரர் ஒருவர் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மலைப்பாங்கான பகுதியில் நபர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் மூலம் புதையல் வேட்டையை பாறைகளுக்கு இடையில் தொடங்குகிறார். அப்போது திடீரென மெட்டல் டிடெக்டர் “பீப் பீப்” என ஒலி எழுப்புகிறது. உடனே அருகில் உள்ள பாறைகளை உடைத்து உள்ளே பார்த்தபோது கற்களுக்கு அடியில் ஒரு சிறிய பழங்கால பெட்டியில் தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டு இருந்தது.
இந்த நாணயங்கள் பார்ப்பதற்கு பழங்கால நாணயங்கள் போல இருந்தாலும் அதன் தன்மை மங்காமல் பளபளப்பாக இருந்தது. இந்த வீடியோ உண்மையானதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 120 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் எண்ணற்ற பகிர்வுகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து பலர் கலவையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் இது போன்ற உலோக மெட்டல் டிடக்டரை வாங்க வேண்டும் என விசாரித்து வருகின்றனர்.
View this post on Instagram