அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவடைந்தன. அதானி கிரீன் எனர்ஜி பங்கு 26 ரூபாய் குறைந்து 512 ரூபாய் ஆகவும் அதானி பவர் பங்கு 8 ரூபாய் குறைந்து 154 ரூபாயாகவும் உள்ளது. அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்கு 39 ரூபாய் குறைந்து 749 ரூபாயாகவும் டோட்டல் கேஸ் பங்கு 41 ரூபாய் குறைந்து 791 ரூபாயாகவும் உள்ளன.

அதானி என்டர்பிரைசஸ் பங்கு 42 ரூபாய் குறைந்து 1362 ஆகவும் ஏசிசி நிறுவன பங்குகள் 20 ரூபாய் குறைந்து 1731 ரூபாயாகவும் சரிந்துள்ளது. அதானி ஸ்போர்ட்ஸ் பங்கு 4 ரூபாய் குறைந்து 543 ரூபாய் ஆகவும் வில்மர் பங்கு 17 ரூபாய் குறைந்து 373 ரூபாயாகவும் வீழ்ச்சடைந்துள்ளது.