ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  இதில் மக்களுக்கு கட்சியினர் சார்பாக பணம் வழங்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் படையும், அதிகாரிகளும் வேடிக்கை மட்டும் பார்க்கின்றனர். தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது நியாயமா? ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கவில்லை என்றால் இந்த தேர்தல் எதற்கு? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.