கடந்த 2004-ஆம் வருடம் தன் திரைப் பயணத்தில் கால்பதித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் இந்தியில் அறிமுகமானாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக திரைப்படங்கள் நடித்துள்ளார். சுமார் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் சொந்தமாக பல தொழில்களை செய்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2020ம் வருடம் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

திருமணம், குழந்தைக்கு பின் மீண்டுமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால். தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் அவ்வப்போது தன் மகனின் புகைப்படங்களை வெளியிடும் காஜல் அகர்வால், தற்போது ஒரு கியூட்டான வீடியோவை வெளியிட்டு உள்ளார். வீடியோவில் அவரது மகன் நீல் Plank செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருக்கின்றனர்.