ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது.

இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டது.

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ரசிகர் ஒருவர் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்று உள்ளார். அப்போது போட்டோ எடுத்துட்டு போபா என அந்த ரசிகரை fun ஆக அழைத்துள்ளார் ஜுனியர் என்.டி.ஆர். அதன்பின் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.