அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படத்தை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். அனிருத் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. ஆனால் இதுவரை இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் குறித்த தகவலும் வெளியாகவில்லை. முதலில் நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது.

அதன் பின் த்ரிஷா என தெரிவித்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக யார் இப்படத்தின் கதாநாயகி என்று கூறவில்லை. இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.