தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. பாலிவுட்டிலும் அதிக படங்களில் தமன்னா நடித்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. இருவரும் லிப்லாக் முத்தம் கொடுக்கும் வீடியோ புத்தாண்டு தினத்தில் வெளியானது.

இருப்பினும் நடிகை தமன்னா தன் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நடிகை தமன்னா பொது நிகழ்ச்சிகளில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து கலந்து கொள்ளும் நிலையில் தற்போது அவருடன் சேர்ந்து இரவு டின்னர் டேட்டிங் சென்றுள்ளார். இருவரும் காரில் டேட்டிங் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் விஜய் வர்மா மற்றும் தமன்னா காதல் உறுதி தான் என்று கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)