தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

நாகசைதன்யாவை காதலித்தபோது நடிகை சமந்தா அவரின் நினைவாக தன்னுடைய ஹிப் பகுதியில் ‌ Chay என்ற வார்த்தையை டாட்டூவாக போட்டு இருந்தார். இந்த டாட்டுவை தன்னுடைய காதலின் சின்னமாகவே கருதி சமந்தா வெளிப்படையாகவே அதை போட்டோ ஷூட்களில் காட்டி வந்தார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாகசதன்யா தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையிலும் நாக சைதன்யாவின் நினைவாக போட்ட டாட்டூவை சமந்தா இன்னும் அழிக்காமல் அப்படியே வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் நடிகை சமந்தா எடுத்துக் கொண்ட போட்டோ சூட் புகைப்படங்களில் கூட அந்த டாட்டூ இருக்கிறது.