
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகா தற்போது படங்கள் மற்றும் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்கத்தில் நடிகை ரேகா தற்போது மிரியம்மா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

20 வருடங்களுக்கு பிறகு நடிகை ரேகா கதாநாயகியாக நடிக்கும் படத்தை 72 பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மாலதி நாராயணன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரெஹைனாஇசையமைக்கும் நிலையில், எழில்துறை, அனிதா சம்பத், வி.ஜே ஆஷிக், சினேகா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் சூட்டிங் பூஜையுடன் சிறப்பாக தொடங்கியுள்ளது.